வெள்ளி, 23 நவம்பர், 2012

தமிழ் புத்தாண்டு

"நித்திரையில் இருக்கும் தமிழா...!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்.
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு...!"

கலைஞர் “முயலுக்கு நாலு கால்” என்று சொன்னால் “இல்லையில்லை... கலைஞர் ஒரு தமிழன துரோகி, போலி நாத்திகவாதி, சுயநலவாதி... அவர் சொல்வது எல்லாவற்றையும் நான் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பேன்... நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான்...” என்று சொல்பவர்களுக்கு மேலே உள்ள பாரதிதாசன் கவிதையை டெடிகேட் செய்கிறேன். எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டேன் என்பவர்கள் சமஸ்கிருத புத்தாண்டாம் ஏப்ரல் பதினான்கையே பிடித்து தொங்குங்கள்.

செவ்வாய், 20 நவம்பர், 2012

பாலாக் கீரையின் ரகசியம்

இன்று கொழுப்பைக் கரைக்கும் பசலை பற்றிய தகவல்.

உண்மையில் பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் காய்கறி வேறெதுவும் இல்லை. இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுப்பதால் மேலைநாடுகளில் இதை கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள். இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலுக்கு எதிரி.

பசலை ஆசியாவில் முதலில் பழக்கத்திற்கு வந்ததாக சொல்கிறார்கள். பத்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமானது. பிரபலமானது 1800-களில். பிரான்ஸ், இங்கிலாந்து வந்து பின் அமெரிக்காவுக்குப் போனது. மக்கள் அதிக நேரம் வேகவைத்ததால் சாம்பல் கலருக்கு மாறி வாசனையும் போய் சத்தெல்லாம் வீணானது. அப்புறம்தான் கீரையை எவ்வளவு ஃப்ரஷ்ஷாக சமைக்கிறோமோ, அந்த அளவுக்கு நல்லது; சத்து வீணாகாது என்று புரிந்தது.

இந்தக் கீரை ஆண்டு முழுவதும் கிடைக்கும். குளிர்காலத்தில் இளசாக கிடைக்கும். மணமும் அலாதி. ஹிந்தியில் இதை பாலக் என்பார்கள்.

பசுமையாக ஈரப்பசையுடன், கரும்பச்சை நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் இலைகள் இருந்தால் கீரை பழசு. தண்டு மெலிதாக இருந்தால் இளசு. முகர்ந்து பார்த்தால் அதன் பச்சை வாசனையிலேயே தெரியும் புதியது என்று.

சாதாரணமாக கீரையை நறுக்கி விட்டு அலம்புவார்கள். அப்படிச் செய்தால் சத்துக்கள் வெளியேறிவிடும். பதிலாக ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் வைத்து அப்படியே முழுசாகபோட்டு அலசி எடுக்கவும். தண்ணீரில் மண் குப்பையெல்லாம் தங்கிவிடும். பின்பு நறுக்கி சமைக்கவும். முற்றிய தண்டுகளையும், இலைகள் நடுவில் தடித்துள்ள பாகங்களையும் கிள்ளி போட்டுவிட வேண்டும்.

இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.

அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்குமீறி சாப்பிடக் கூடாது
Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]

வெள்ளி, 2 நவம்பர், 2012

அளந்து பாருங்க !

                                    இந்திய ரூபாயின் நோட்டுகளின் அளவுகள் 

1000  ரூபாய் - 177 மி.மீ  நீளம்  , 73 மி.மீ அகலம்.
  500  ரூபாய் - 167 மி.மீ  நீளம்  , 73 மி.மீ அகலம்.
  100  ரூபாய் - 157 மி.மீ  நீளம்  , 73 மி.மீ அகலம்.
    50  ரூபாய் - 147 மி.மீ  நீளம்  , 73 மி.மீ அகலம்.
   20  ரூபாய் - 147 மி.மீ  நீளம்  , 63 மி.மீ அகலம்.
   10  ரூபாய் - 137 மி.மீ  நீளம்  , 63 மி.மீ அகலம்.
     ரூபாய் - 117 மி.மீ  நீளம்  , 63 மி.மீ அகலம்.
      அண்ணாவுக்கு அறிஞர் பட்டம் கொடுத்தவர் யார் தெரியுமா  

          கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது அதில் அண்ணாவும் இன்னும் வேறு பலரும் உரையாற்ற அழைக்கப் பட்டிருந்தனர். குறிப்பிட்ட நேரம் கடந்தும் அண்ணாவைத் தவிற பிற பேச்சாளர்கள் கூட்டத்துக்கு வரவில்லை.  இதனால் அங்கு குழுமியிருந்த பொது மக்களுக்கு பெரும் மனக்குறை ஏற்ப்பட்டது. அதனை  அறிந்த அண்ணா அவர்கள் , சலிப்பை அகற்ற ஒரு உத்தியைக் கையாண்டார் அந்தக் கூட்டத்தில் பிறர் பேசவேண்டிய தலைப்புக்களையும் , தாம் பேசவந்த தலைப்பினையும் எடுத்துக் கொண்டு , முன் குறிப்பு எதுவுமின்றி , தட்டுத் தடங்கல் எதுவும் இல்லாமல் அண்ணா ஒவ்வொரு தலைப்புக்களையும் மிக அழகாக பேசி முடித்தார். பல்வேறு தலைப்புக்களையும் வைத்து  , முன் தயாரிப்பில்லாமல் உரையாற்றிய அண்ணாவின் ஆற்றலைக் கண்டு கல்கி அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார், உளமாறப் பாராட்டினார். அத்துடன் பொதுமக்கள் முன்னிலையில் அண்ணா அவர்களுக்கு ‘அறிஞர்’ என்னும் பட்டத்தையும் சூட்டி மகிழ்ந்தார்